தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற புதுக்கோட்டை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற புதுக்கோட்டை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் திருமயத்தில் நடைபெற்றது.புதிய மாவட்ட நிர்வாகிகள்  தேர்தலுக்கு தேர்தல் ஆணையாளர்களாக நாமக்கல் மாவட்ட செயலாளர் சங்கர் மற்றும் திருவாரூர் மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் செயல்பட்டனர்.மாவட்டத் தலைவராக ம.சிவா, மாவட்ட செயலாளராக  க.சு.செல்வராஜ், மாவட்ட பொருளாளராக இரா.மலர்மன்னன், மாநில செயற்குழு உறுப்பினர்களாக அழகப்பன், ஞானப்பிரகாசம் ஆகியோரும்,மாவட்ட கொள்கை விளக்க செயலாளராக செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர்களாக அப்பு, பாஸ்கர் ஆகியோரும். மாவட்ட துணைச் செயலாளர்களாக குமார், பிரகாஷ் ஆகியோரும், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக வீரசேகரன், அப்துல் ஹமீது, அங்கப்பன், ஜோசப் கென்னடி, சரவணன் ஆகியோரும் 
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவர் பெ.இரா.ரவி, மாநில பொதுச்செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன், மாநில பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் கலந்துகொண்டு  புதிய நிர்வாகிகளை வாழ்த்தினர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy