நெல்லை மண்டல இளைஞர் வானவியல் விண்வெளி அறிவியல் மாநாடு...

நெல்லை மண்டல இளைஞர் வானவியல் விண்வெளி அறிவியல் மாநாடு...

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கல்லூரி மாணவ மாணவியர் தேர்வாகியுள்ள அறிவியல் மாநாடு..

திருநெல்வேலி மண்டல அளவிலான இளைஞர் வானவியல் விண்வெளி அறிவியல் மாநாடு ஜாய் பல்கலைகழகத்தில் நடைபெற்றது.

யாஸ்க் 2026 மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் முத்துசாமி தலைமை வகித்தார். மாநாட்டு மண்டல கல்வி  ஒருங்கிணைப்பாளர்  முனைவர் செந்தில்குமார் வரவேற்றார்  சிறப்பு விருந்தினர் துணைவேந்தர் ஜான்டீ பிரிட்டோ  சிறப்பான படைப்புகள் கட்டுரைகள் பகிர்ந்த கல்லூரி  இளம் விஞ்ஞானி களுக்கு சான்றுகள் பதக்கங்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார் உலகம் முன்னேற அறிவியல் துறையில் கண்டுபிடிப்புகள் அவசியம் என உரைத்தார். 
 

எய்ட் இந்தியா ஒருங்கிணைப்பாளர் சுடலைமணி மாவட்ட  மாதிரி பள்ளி வானவியல் கல்வி தொடர்பாளர் சாம் ஹரிஸ்  கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் ரத்தினா முனைவர் கற்பக வல்லி பங்கேற்றார்கள்.  மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் இளம் விண்வெளி அறிவியல்  மாநாடு 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டல த்திலும் ஆய்வுக்கட்டுரைகள் போஸ்டர்கள் குறும்படதயாரிப்பு அஸ்ட்ரோ போட்டோகிராபி அஸ்ட்ரோ கேம்ஸ் உள்ளிட்ட  பிரிவுகளில் சிறந்த படைப்புகளை  படைத்த மாணவ குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டு நாமக்கல் மகேந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற இருக்கும் மாநில அளவில் நடைபெறும்  விண்வெளி மாநாடு 2026 ல் பங்கேற்பாளர்கள்.

673d8e77-4528-4f62-be40-172a17e79ab4.webp

நாகர்கோவில் தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அறிவியல் கலை கல்லூரி இளம் மாணவ மாணவிகள் ஆர்வத்தோடு படைப்புகளை படைத்தனர். இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டிலிருந்து, மாநில அளவிலான வானியல் நிகழ்ச்சியில் பங்கேற்க 7 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியைச் சேர்ந்த செல்வி அஸ்வினி மற்றும் சர்மிதா ஆகியோர் 'வானியல் புகைப்படம் எடுத்தல்' பிரிவிலும், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த எஸ். சுதாமதி மற்றும் என். முத்துக்கிருத்திகா ஆகியோர் 'வானியல் குறும்படம்' பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

34059c65-0b6f-40c0-bf91-6918bb2a5433.webp

மேலும், 'வாய்மொழி விளக்கக்காட்சி'  பிரிவில், மாநில அளவிலான வானியல் போட்டிகளில் பங்கேற்க கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி, திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி ரோகிணி இன்ஜினியரிங் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளிலிருந்து 5 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

டெலஸ்கோப் வழியே சூரிய புள்ளிகளை சூரிய வடிகட்டி அணிந்து பாதுகாப்பாக  காணவும்  விண்வெளி வானியற்பியல் படங்களும் காட்சிபடுத்தியிருந்தனர்

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy