சங்கம் வைத்து தமிழை போற்றி வளர்த்த பாண்டிய மன்னர்களுக்கு மதுரையில் அருங்காட்சியம் அமைக்க வேண்டும்
பாண்டியநாடு மக்கள் கட்சியின் நிறுவனர் முத்துராஜ் பாண்டியன் அவர்கள் தலைமையில் ஆட்சியரிடம் மனு
பகுஜன் திராவிட கட்சியின் (பதிக) சார்பில், பீட்டர் ஃப்ரெட்ரிக் மற்றும் பஜன் சிங் ஆகியர்களால் எழுதப்பட்டு, சர்தார் ஜீவன் சிங் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “எளிய இதயங்களை கவர்தல்” புத்தகத்தின் அறிமுக விழா மதுரை சிம்மக்கல் ஹோட்டல் பிரசிடென்டில் நடைபெற்றது. முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பெருந்திரளான பங்களிப்போடு நடைபெற்றது.
பகுஜன் திராவிடக் கட்சியின் மாநிலத் தலைவர் கொற்கை பழனி சிங் தலைமையில், வழக்கறிஞர் செல்வா சிங் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார்.

சமத்துவப் பாதையில் மனித மாண்பினை வலியுறுத்தும் இந்நூலின் முதல் பிரதியை மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சு.க. முருகவேல்ராஜன் வெளியிட, ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு. ஜக்கையன் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினர்.
அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் சங்கமமாக, தமிழக மண்ணில் சீக்கிய தத்துவத்திற்கு ஏற்பட்டுள்ள மகத்தான வரவேற்பைப் போற்றும் வகையில் மனிதநேயம் மற்றும் சமத்துவக் கருத்துக்களைத் தாங்கிய இந்த நூல் தமிழ் மக்களின் ஒவ்வொரு வீட்டுக்கும், போய்ச் சேர வேண்டும் என்று விழாவில் பங்கேற்ற தலைவர்கள் ஒருமுகமாக வலியுறுத்தினர்.
மதுரை மாமன்ற உறுப்பினரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இன்குலாப், அதிமுக பொதுச்செயலாளர்களில் ஒருவரான பசும்பொன் பாண்டியன், திராவிட பெரியார் கழக தலைவர் மா.பா.மணியமுதன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகத் தலைவர் மீ.த.பாண்டியன், தந்தை பெரியார் திராவிடக் கழக மாணவரணி செயலாளர் அதர்மம் மனோஜ், புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, அரசியல் விமர்சகர் சவரி ராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக, பகுஜன் திராவிடக் கட்சியின் தேசியத் தலைவர் சர்தார் ஜீவன் சிங் வழிகாட்டுதல் மற்றும் நிறைவு உரையை வழங்கினார். பகுஜன் திராவிட கட்சியின் மாணவர் பேரவை சுபாஷ் நன்றியுரை கூறினார்.
மனித உரிமைகளையும் சமத்துவத்தையும் போற்றும் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தமிழ் சமூகத்தின் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த விழா அமைந்திருந்தது.
பாண்டியநாடு மக்கள் கட்சியின் நிறுவனர் முத்துராஜ் பாண்டியன் அவர்கள் தலைமையில் ஆட்சியரிடம் மனு
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.