நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த்துறையின் கீழ் செயல்படும் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் சிறப்பு அலுவலகங்களில், ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து 5 முதல் 7 ஆண்டுகளுக்கும் மேலாகவும், சிலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவும் அலுவலர்கள் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு விதிகளின்படி ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அலுவலர்களை, எவ்வித சங்கப் பாகுபாடுமின்றி இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீண்டகாலமாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணிக்காலத்தைக் கருத்தில் கொண்டு, அரசு விதிகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றுமா? விட மாற்ற உத்தரவைப் பிறப்பிக்க மாவட்ட நிர்வாகம் தயங்குவது ஏன்?என்பதே தற்போது எழுந்துள்ள எதிர்பார்ப்பாக உள்ளது.