குழந்தைகள் நலனுக்கு புதிய முகவரி! நாமக்கல்லில் குழந்தைகள் நலக்குழு புதிய அலுவலகத்தை ஆட்சியர் மதுபாலன் திறந்து வைத்தார்

குழந்தைகள் நலனுக்கு புதிய முகவரி!   நாமக்கல்லில் குழந்தைகள் நலக்குழு புதிய அலுவலகத்தை ஆட்சியர் மதுபாலன் திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன்  திறந்து வைத்தார்.நாமக்கல் திருச்சி சாலை, நேதாஜி நகரில் செயல்பட்டு வந்த குழந்தைகள் நலக்குழு அலுவலகம் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல்  திருச்சி சாலையில் செயல்பட்டு வந்த இளஞ்சிறார் நீதிக்குழுமமும் புதிய கட்டிடத்தின் இரண்டாம் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இளஞ்சிறார் நீதிக்குழும அலுவலகத்தை முதன்மை நடுவர் எஸ்.தினேஷ் குமார் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா, குழந்தைகள் நலக்குழு தலைவர் பாலசுப்பிரமணியம், உறுப்பினர்கள் ருகையா பேகம், ஆனந்தி, சாம்பசிவமூர்த்தி, உஷா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட நன்னடத்தை அலுவலர் ரேணுகாதேவி, இளஞ்சிறார் நீதிக்குழும உறுப்பினர்கள் பாக்கியவதி, சந்திரசேகரன், குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

புதிய அலுவலகங்கள் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy