புதுக்கோட்டை ஜேஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்அறிவியல் மாநாட்டையொட்டி மதிப்பீட்டாளர்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை ஜேஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்அறிவியல் மாநாட்டையொட்டி மதிப்பீட்டாளர்களுக்கு பயிற்சி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை யொட்டி புதுக்கோட்டை ஜேஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி நடந்தது.  அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவரும் மேனாள் குழந்தைகள் நலக்குழு தலைவருமான திரு கே .சதாசிவம்  கலந்து கொண்டு பேசினார். 
இந் நிகழ்விற்கு கல்லூரியின் பேராசிரியர் முனைவர் தயாநிதி  தலைமை வகித்தார். 
அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் வீரமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணவாளளன் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  ஷோபா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் 15 திட்ட அறிக்கைகள் கொடுக்கப்பட்டு முன் மதிப்பீடு செய்ய அறிவுரை வழங்கப்பட்டது வரும் அக்டோபர் 30-ஆம் தேதி மாணவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சியும் மாவட்ட மாநாடும்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கும் பங்கேற்ற மாணவர்களுக்கும் *இளம் விஞ்ஞானி* என்ற விருதும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது ஏன தெரிவிக்கப்பட்டது.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy