ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி, மக்களுக்காக அறக்கட்டளை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி
100 பேருக்கு பரிசுத் தொகுப்புகள், 200 பேருக்கு மதிய உணவு
கடந்த 23.10.2026 அன்று இரவு நீலகிரி மாவட்டத்தை புரட்டிப் போட்ட கனமழை, மலைப்பாதைகளை மரணப்பாதைகளாக மாற்றியிருந்தது. அன்று இரவு 9 மணிக்கு மேல் குன்னூர் முதல் 14-வது கொண்டை ஊசி வளைவு வரையிலான சுமார் 15 கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட மலைச்சாலையில், தொடர்ச்சியாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மலை உச்சியில் இருந்து ஊற்றுபோல் வழிந்த மழைநீருடன், டன் கணக்கிலான மண், ராட்சத பாறைகள், மரங்களின் கிளைகள், சேறு ஆகியவை சாலையை முழுமையாக மூடியது. சில இடங்களில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவர்களும் உடைந்து விழுந்தன. இரவு நேரம், அடர்ந்த மூடுபனி, மின்சாரம் துண்டிப்பு, கொட்டும் மழை என அனைத்தும் சேர்ந்து அந்த சாலையை முற்றிலுமாக இருளில் தள்ளியிருந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த எந்த வாகனமும், மண்சரிவில் சிக்கினால், உயிர் பிழைப்பது கடினம் என்ற அபாயகரமான சூழல் நிலவியது.
இந்த தகவல் கிடைத்தவுடன், அன்று இரவு ரோந்து பணியில் இருந்த சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் அவர்கள், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், தனது வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவருடன் உதகை நகர காவல் ஆய்வாளர் அன்பரசு, குன்னூர் காவல் ஆய்வாளர், குன்னூர் வட்டாட்சியர், மூன்று முதல் நான்கு காவலர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, நிலைமை எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக இருந்தது. ஒரு இடத்தில் மண்ணை அகற்றினால், அடுத்த இடத்தில் புதிதாக மண் சரிந்து விழுந்து கொண்டிருந்தது.
ஆனால் அந்த அதிகாரிகள் சோர்ந்து போகவில்லை. உடனடியாக மேட்டுப்பாளையம் மற்றும் பர்லியார் பகுதியில் இருந்து இரண்டு ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்தனர். மேலதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்காமல், கள நிலவரத்தை புரிந்து கொண்டு, குன்னூர் முதல் பர்லியார் வரை இரவோடு இரவாக போக்குவரத்தை தடை செய்தனர். மலை ஏறி வந்து கொண்டிருந்த பேருந்துகள், லாரிகள், கார்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டு, பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு பெரும் தொடர் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதன் பிறகு தான் உண்மையான போராட்டம் தொடங்கியது. ஜேசிபி இயந்திரங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் மட்டுமே அங்கு வெளிச்சம் தந்தது. கொட்டும் மழையில், சேற்றில் கால் புதைய, தொடர்ந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக, விடியற்காலை 4 மணி வரை அந்த அதிகாரிகள் களத்திலேயே நின்று, ஒவ்வொரு இடமாக மண்சரிவை அகற்றினர். ஒரு இடத்தில் பாறைகளை அகற்றும் போது, மற்றொரு இடத்தில் மரம் விழுந்து சாலையை மறித்தது. அதையும் அகற்றி, சாலையை சுத்தம் செய்தனர். மழையில் முழுவதுமாக நனைந்து, குளிரில் நடுங்கியபடி, தங்கள் உயிரை பணயம் வைத்து அவர்கள் பணியாற்றினர்.
இது சாதாரண மண் அகற்றும் பணி அல்ல. இது மனித உயிர்களை காக்கும் பணி. அன்று இரவு மட்டும் அவர்கள் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், அந்த இருட்டில், மண்சரிவில் சிக்கி பல உயிர்கள் பலியாகியிருக்கும். ஆனால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், புகைப்படத்திற்கு கூட போஸ் கொடுக்காமல், தங்கள் கடமையை முடித்துவிட்டு அமைதியாக திரும்பிய அந்த அதிகாரிகளின் செயல், உண்மையான அரசு பணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வெளிச்சத்திற்கு வராத இந்த இரவு நேர மீட்பு பணி, நீலகிரி மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஜேசிபி ஓட்டுநர்கள், மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் நீலகிரி மக்கள் சார்பாகவும், நீலகிரி மக்கள் பாராட்டுதல்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
Publisher
100 பேருக்கு பரிசுத் தொகுப்புகள், 200 பேருக்கு மதிய உணவு
காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு -எச்சரிக்கை.
நீலகிரி மலையின் மண்ணுக்குள் மறைந்திருந்த இரண்டு புதிய வகை மண் வாழ் பூச்சி இனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.