" நீ கையெழுத்து போடாத.. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்.. "

" நீ கையெழுத்து போடாத.. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்.. "

லஞ்சம் வாங்கிய மின்வாரிய சிறப்பு நிலை அலுவலர்.லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த சக அலுவலர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மின் இணைப்புக்கு ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் தாா்வழி பகுதியை சோ்ந்த பா்வீன் பானு. இவா் வேலூரில் வசித்து வருகிறாா். தாா்வழி பகுதியில் உள்ள தன்னுடைய தந்தை கட்டி வரும் வீட்டுக்கு புதிய மின் இணைப்பு வழங்க வேண்டி ஆம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் மனு செய்திருந்தாா். 
ஆம்பூா் மின்வாரிய ஃபோா் மேன் சிவக்குமாா் அந்தப் பகுதியை ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.50,000/- லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளாா். மின் இணைப்பு வழங்காததால் அவரை தொடா்பு கொண்டபோது மேலும் ரூ.25,000 கொடுக்க வேண்டுமென கேட்டுள்ளாா். அதன்படி மனுதாரா் ரூ.10,000 ஆயிரத்தை கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளாா். இது குறித்து மனுதாரா் திருப்பத்தூா் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் ஏடிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் போலீஸாா் ஆம்பூா் மின்வாரிய அலுவலகத்திற்கு வியாழக்கிழமை மாறுவேடத்தில் திடீரென வருகை தந்து ஃபோா்மேன் சிவக்குமாரை பிடித்து சுமாா் 7 மணி நேரம் விசாரணை நடத்தினா். அவருடைய கைப்பேசியை பறிமுதல் செய்து ஆய்வு செய்து பணம் பெற்றதை உறுதி செய்தனா். மனுதாரரிடம் இருந்து பணம் பெற்றது உறுதியானதைத் தொடா்ந்து அவரை கைது செய்தனா். விசாரணையின் போது சக அலுவலர் ஒருவர் நீ கையெழுத்து போடாத.. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்.. " 
என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார் அங்கு பரபரப்பு ஏற்பட்டது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியற்றினர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy