இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலி சீட்டு நிறுவனங்கள் மற்றும் அனுமதி பெறாத நிதி நிறுவனங்கள் இரண்டு ஆண்டில் பணம் இரட்டிப்பு, மாதம் தவறாமல் உறுதியான வருமானம், ஒருமுறை முதலீடு, வாழ்நாள் முழுவதும் லாபம் இத்தகைய கவர்ச்சிகரமான வாசகங்களுடன் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சில சீட்டு மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. துண்டுப் பிரசுரங்கள், அச்சிட்ட அறிவிப்புகள், சமூக ஊடகங்கள் வழியாகவும் இத்தகைய விளம்பரங்கள் பரவி வருகின்றன. பல ஆண்டுகள் உழைத்து சேர்த்த சேமிப்பு, ஒரு நொடி ஆசையில் கரைந்துவிடக் கூடாது. முறையான பதிவு இல்லாத திட்டங்களில் செலுத்திய பணத்தை மீட்பது எளிதல்ல.
வங்கி வட்டியை விடப் பல மடங்கு அதிக வருமானம் என்ற வாக்குறுதி, இன்றே சேருங்கள், இல்லையெனில் வாய்ப்பு போய்விடும் என்ற அவசரப்படுத்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தால் கமிஷன் என்ற சங்கிலித் தொடர் திட்டம், பதிவு மற்றும் அனுமதி விவரங்களை காட்ட மறுப்பது, ரசீது அல்லது ஆவணம் இல்லாமல் ரொக்கமாகப் பணம் கேட்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
இந்த நிறுவனம் சட்டப்படி பதிவு பெற்றதா என்பதையும், செயல்படுவதற்கு உரிய அனுமதி உள்ளதா என்பதையும், வாக்குறுதி அளிக்கப்படும் வருமானம் நடைமுறையில் சாத்தியமா என்பதையும் சரிபார்த்து இவற்றுக்கு எழுத்துப்பூர்வமான, சரிபார்க்கக்கூடிய பதில் கிடைக்கவில்லை என்றால், முதலீடு செய்ய வேண்டாம்.
முகவரி மற்றும் உரிய அனுமதி இல்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மற்றும் முதலீட்டுச் செயலிகள் மூலமாக பணப் பரிவர்த்தனை செய்வதை தவிர்க்கவும். அரசு அனுமதி பெற்ற மற்றும் ரிசர்வ் வங்கி அல்லது பதிவுத் துறை மூலம், உரிமம் பெற்ற சீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் (ஆர்.பி.ஐ.,) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளை https://www.rbi.org.in/commonman/english/scripts/NBFCs.aspx என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் அதிக வருமான வாக்குறுதிகளை நம்பி உங்கள் சேமிப்பை முதலீடு செய்யாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலி சீட்டு நிறுவனங்கள், அனுமதி பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டும் நபர்களிடம் ஏமாறாமல், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு, மாவட்ட கலெக்டர் சரவணன், தெரிவித்துள்ளார்.
Sheik Mohamed
Publisher
Related posts
தருமபுரி அருகே நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மீது பாறை விழுந்து விபத்து...
20 Sep, 2026
13 mins read
65 views
சுரங்கப்பாதை கேட்டு மறியல் போராட்டம்: 30 பெண்கள்- 9 திருநங்கைகள் உட்பட 80-பேர் கைது.
18 Sep, 2026
16 mins read
57 views
Follow us
Categories
- சேலம் (17)
- தூத்துக்குடி (14)
- காஞ்சிபுரம் (12)
- திருப்பத்தூர் (9)
- நீலகிரி (9)
Lastest Post
L
Your experience on this site will be improved by allowing cookies
Cookie Policy
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.