சேலத்தில் Eco-Freak Organization சார்பில் நடைபெற்ற Eco-Freak Legacy Awards 2026 விருது வழங்கும் விழாவில், பேராசிரியர் அகமது அவர்களுக்கு ‘சிறந்த மனிதநேய விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
‘மனிதம் காப்போம்; மாற்றத்தை வரவேற்போம்!’ என்ற நோக்கத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், காவல் உதவி ஆணையாளர் அஸ்வினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
Eco-Freak Organization நிறுவனத் தலைவர் வருண் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மனிதநேயம் மற்றும் சமூக நலனை முன்னிறுத்தும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.
விழா சிறப்பாக நடைபெற்றது.