உதகையில் கனமழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளை உள்ளூர் மக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

உதகையில் கனமழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளை உள்ளூர் மக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

நேற்று பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள இரும்பு பாலத்தில் கழுத்தளவிற்கு தண்ணீர் தேங்கியால் வாகனங்களை இயக்க முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக  போக்குவரத்து நிறுத்தப்பட்டது.WhatsApp Image 2026-10-06 at 2.19.40 PM
 

இந்நிலையில் ரயில்வே பாலம் பகுதியில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் நகராட்சி, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று இரண்டு மணி நேரத்தில் கனமழை பெய்ததாகவும், ரயில்வே பாலம், மினி கார்டன், சேரிங்கிராஸ், இந்த போஸ்ட் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதாகவும், சில மணி நேரங்களில் சாலைகளில் தீங்கு நின்ற தண்ணீர் வடிந்ததால் போக்குவரத்து சீரானது என்றும், ரயில்வே பாலம் உயரம் குறைவாக உள்ளதால் மழைநீர் தேங்கி நிற்பதாகவும், அப்பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக அகற்றி வருவதாகவும், அப்பகுதியில் தண்ணீர் வெளியேற்ற நிரந்தர மோட்டர் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கனமழை பெய்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் இரண்டு ஜேசிபி இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், படகு இல்லம் ஏரியில் படர்ந்துள்ள வெங்காயத்தை மார்களை அகற்றும் பணிகள் நடைபெற உள்ளதாகவும், நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி, வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உதகையில் உள்ள பொதுமக்களுக்கு எந்தப் பகுதிகளில் மழை நீர் தேங்கும் என்று நன்றாக தெரியும் என்பதால் கனமழை பெய்யும் நேரங்களில் அவ்வழிகளை தவிர்க்க வேண்டும் என்றும் உதகை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy