பத்திரிகையாளர்கள் என்று போலியாக மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பத்திரிகையாளர்கள் என்று போலியாக மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு -எச்சரிக்கை.

நீலகிரி மாவட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் அரசு அலுவலர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டியும், வெளி வட்டாரத்தில் பத்திரிகையாளர்கள் என்று போலியாக மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளர்.

பத்திரிக்கை மற்றும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக செயல்பட்டு, கடைகோடியில் உள்ள பொதுமக்களுக்கும், அரசால் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அவர்களது கோரிக்கைகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்திரிக்கை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கி வரும் நிலையிலும், பொறுப்பு மிக்க பணியினை ஆற்றி வரும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.WhatsApp Image 2026-10-13 at 11.14.36 AM
 

ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள இது குறித்து மாவட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் அரசு அலுவலர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டுவதும், அவர்களை பற்றி அவதூறு செய்திகளை வெளியிட்டு கலக்கம் ஏற்படுத்துகின்றனர். மேலும், தங்களுக்கு உயர் அலுவலர்களை நன்கு தெரியும் என்றும், அவர்களிடம் சொல்லி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுக்கிறேன் என்றும், ஏமாற்று வார்த்தைகளை பயன்படுத்தி பணத்தையும் பறித்துக்கொள்வதாக ஏராளமான புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து வருகின்றன.

ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. அந்த நபர்கள் காவல் துறையின் மூலம் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கண்டறியப்படும் போது அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரை பயன்படுத்தி போலியாக, அரசு அலுவலர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டினால், சம்மந்தப்பட்ட நபர்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 9498042445 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் தகவல்களை அனுப்பினால், அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், வாகனத்தில் பத்திரிக்கை சாராத நபர்கள் போலியாக Press என்ற ஒட்டுவில்லைகளை (Sticker) ஒட்டியிருந்தால் அவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy