திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் மாவட்ட ஆட்சியர்..

திருப்பத்தூர்  மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் மாவட்ட ஆட்சியர்..

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன்,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் 538 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 04 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.34,661/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்  அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) .பூஷணகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் .தணிகாசலம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .தாமரைமணாளன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் .முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy