திருப்பத்தூர் மாவட்ட காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க ‘மகிழ்ச்சி’ திட்டம் – எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்ட காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க ‘மகிழ்ச்சி’ திட்டம் – எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்ட காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் மனநலம் மற்றும் குடும்ப நலனைப் பாதுகாக்கும் நோக்கில், ‘மகிழ்ச்சி’ திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இத்திட்டத்தின் மூலம் மன அழுத்தம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் காவலர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் மற்றும் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

காவலர்கள் தங்களது பணிச்சுமை மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து மீண்டு, மனநலத்துடன் பணியாற்றுவதற்கும், அவர்களின் குடும்ப நலனைப் பாதுகாப்பதற்கும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது.

காவலர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், அவர்களின் மனநலத்தைப் பேணுவதுடன், பணித்திறனை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy