திண்டுக்கல்லில் 13-வது புத்தகத் திருவிழா தொடக்கம் - நீதிபதி முரளி சங்கர் தொடங்கி வைத்தார்

திண்டுக்கல்லில் 13-வது புத்தகத் திருவிழா தொடக்கம் - நீதிபதி முரளி சங்கர் தொடங்கி வைத்தார்

      திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் இணைந்து நடத்தும் 13-வது புத்தகத் திருவிழா திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது.

     விழாவினை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி முரளி சங்கர், மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

புத்தகங்கள்தான் சிறந்த நண்பன்

       விழாவில் நீதிபதி முரளி சங்கர் பேசியதாவது: புத்தக வாசிப்பு என்பது மனிதனின் அறிவை வளர்க்கும். புத்தகங்கள் தான் மனிதனின் சிறந்த நண்பன். மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை குறைத்து புத்தக வாசிப்பை அதிகரிக்க வேண்டும். புத்தகத் திருவிழா மூலம் இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

       கலெக்டர் துர்காமூர்த்தி பேசுகையில், 13-வது ஆண்டாக புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன. மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன என்றார்.

    இந்த புத்தகத் திருவிழாவில் 80-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் மாலையில் இலக்கிய சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற உள்ளன.

     நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இன்ப கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சாந்தி, துணை கலெக்டர்(பயிற்சி) திவ்யலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார், இலக்கியக் களம் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy