ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! மாணவர்களிடம் விடியல் பிரகாஷ் வலியுறுத்தல்

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! மாணவர்களிடம் விடியல் பிரகாஷ் வலியுறுத்தல்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் பத்திரிகை சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பில் தமிழ் திசை நிருபர் விடியல் பிரகாஷ் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை, மக்களின் பிரச்சினைகளையும் உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும். இத்தகைய குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் அச்சமின்றிப் பணியாற்றுவதற்கான பாதுகாப்பான சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் மூலம் மக்களின் தகவல் அறியும் உரிமையையும் உறுதி செய்ய முடியும்” என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy