சென்னை, எழும்பூரில் உள்ள அரும்பொருள் காட்சியகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில நாள் கொண்டாட்ட விழாவில், 2025-ம் ஆண்டிற்கான நாமக்கல் மாவட்டத்தின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது, முன்னாள் மாவட்ட நீதிபதி விடியல் குகன் (எ) கு. கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றி, தனது தொழில்முறை அனுபவத்துடன் தமிழ்மொழி மற்றும் தமிழ்ப்பணியில் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தமிழக அமைச்சர்கள் ராஜ் மோகன், புஷி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இணைந்து விருதினை வழங்கி கு. கருணாநிதியைப் பாராட்டினர்.
நீதித்துறையில் நீண்டகாலப் பணியாற்றியதோடு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் பங்களித்து வரும் முன்னாள் மாவட்ட நீதிபதிக்கு மாநில அளவிலான அங்கீகாரம் கிடைத்திருப்பது நாமக்கல் மாவட்டத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.