ஜோலார்பேட்டையில் களைகட்டிய ‘மகிழ்வித்து மகிழ் – 2026’ விழா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற விஷாலுக்கு சிறப்பு விருது!

ஜோலார்பேட்டையில் களைகட்டிய ‘மகிழ்வித்து மகிழ் – 2026’ விழா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற விஷாலுக்கு சிறப்பு விருது!

அகராதி அறக்கட்டளை சார்பில், ஜோலார்பேட்டை நந்தினி மஹாலில் நடைபெற்ற ‘மகிழ்வித்து மகிழ் – 2026’ உணவுத் திருவிழா, வணிகக் கண்காட்சி மற்றும் தீபாவளிக் கொண்டாட்ட விழா பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் ம. தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பரதநாட்டியம், செண்டை மேளம், KPY சுட்டி அரவிந்த் மற்றும் TSK ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சி, மாயாஜால நிபுணர் தயாவின் மேஜிக் ஷோ, விஜய் டிவி சூப்பர் சிங்கர் மற்றும் ஜீ தமிழ் சரிகமப பாடகர்களின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

தொடர்ந்து, ஈரோடு மகேஷ் தலைமையில் ‘வாழ்க்கை வாழ்வதற்கா? வாழ வைப்பதற்கா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற நகைச்சுவைப் பட்டிமன்றம் விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மருத்துவம், கல்வி, சமூக சேவை, தொழில், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

குறிப்பாக, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்ற விஷாலுக்கு சிறப்பு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வு விழாவின் முக்கிய தருணமாக அமைந்தது.

மேலும், விழாவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய வணிக அரங்கு உரிமையாளர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களும் பாராட்டப்பட்டனர். பொதுமக்களின் ஆதரவுடன் விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy