20 ஆண்டுகள் நீதித்துறையில் சிறப்புப் பணியாற்றிய முன்னாள் மாவட்ட நீதிபதிக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது!
நாமக்கல் மாவட்டத்திற்கான 2025-ம் ஆண்டு விருதைப் பெற்றார் விடியல் குகன் (எ) கு. கருணாநிதி
சென்னை எழும்பூர் மியூசியத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த அரசு விழாவில் இலக்கிய பணியில் சிறந்து விளங்குவோருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கும் விழா, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நா. ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் - சேலம் சங்கலி ஆசாரி நகர் பகுதியைச் சார்ந்த,175 நூல்கள் எழுதிய, சென்னை பல்கலைக்கழகத்தின் அவார்டு ஆஃப் எக்ஸலன்ஸ், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சிறந்தஎழுத்தாளருக்கான விருது, இலக்கியச் செம்மல், ஆன்மீக வைத்திய ரத்னா, ஜாம்பவான் விருது, நாவல் திலகம், பாரதிதாசன் பணிச்செம்மல் உள்ளிட்ட 13 விருதுகள் பெற்ற சேலம் எழுத்தாளர் வெ.தமிழழகனுக்குசேலம்மாவட்டத்திலிருந்து ஆற்றி வரும் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தும் வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதும், ரூபாய் 25,000 பரிசுத்தொகையும் வழங்கப்
பட்டது.
இந்த விருது - பரிசினை பள்ளிக்கல்வி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, பால்வளத்
துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் நா. அருள் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
Publisher
நாமக்கல் மாவட்டத்திற்கான 2025-ம் ஆண்டு விருதைப் பெற்றார் விடியல் குகன் (எ) கு. கருணாநிதி
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.