25 ஆண்டுகளாக அத்தியாவசியமான தேவையான மின்சாரம் & குடிநீர் வசதியின்றி தவிக்கும் பிள்ளையார் பாளையம் மக்கள், 50 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கிய நிலையில் மீதமுள்ள 32 குடும்பங்களுக்கு சாதி அடிப்படையில் மறுப்பு. பிரதமர்,தமிழக முதல்வர் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பிய நிலையில் மாவட்ட ஆட்சியிரிடம் மனு அளித்து பாஜக மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் தேவராஜ் பேட்டி......…
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் கே.தேவராஜ் கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில்,
காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 11வது வார்டு திருவேங்கம்பன் நகர் கன்னியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த 32 குடும்பங்களுக்கு 25 ஆண்டுகளாக அத்தியாவசிய தேவையான மின்சாரம் மட்டும் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
சாதி அடிப்படையில் மக்களுக்கு தேவையான மின்சாரம் வழங்க மறுப்பதாகவும் 50 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ள நிலையில் மீதமுள்ள 32 குடும்பத்திற்கு மின்சாரம் வழங்காததால் முதியவர்கள் பெண்கள் குழந்தைகளுக்கு மிகவும் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாகவும் மின்சார வசதி இல்லாமல் பள்ளி மாணவர்கள் வீட்டில் இரவில் படிக்க மிகுந்த சிரமமுற்றதாக கூறப்படுகின்றது.
இந்த கோரிக்கையை பாரத பிரதமர், தமிழக முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய செயலாளர் அனைவருக்கும் மின்னஞ்சல் தந்தி மூலமாக மனு அனுப்பியுள்ளதாகவும், புறம்போக்கு இடத்தில் வசித்து வந்த மக்களுக்கு நகராட்சி பீம அறிவிப்பு ஒப்புதல் கடிதம் அடிப்படையில் 350 சதுர அடி நகராட்சி வரியாக குடிநீர் மற்றும் வீட்டு வரி செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது.
அதன் அடிப்படையில் இந்த மனு மீது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இப்பகுதியில் 32 குடும்பங்கள் மின்சாரம் மட்டும் குடிநீர் இல்லாமல் பிணம் போன்று வசித்து வருவதாகவும் மேல் சாதிக்கு சாதி என்ற பிரிவினை காரணமாக கீழ் சாதி உள்ள மக்களுக்கு வசதிகள் தர மறுக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் வேண்டி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாகவும் கடந்த முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டபோதும் தங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும் தாங்கள் பட்டா வேண்டும் என்று கேட்கவில்லை, மின்சாரம் போதும் என்றும், வாழ்வதற்கு அடிப்படை வசதி மற்றும் போதும் என கோரி மாவட்ட ஆட்சியிரிடம் மனு அளித்துள்ளனர்.