சேலத்தில்உலகப்புகழ்பெற்ற தஞ்சைப் பெருவுடையார்கோவில் நிறுவிய சோழப்பேரரசின் மாமன்னர் அருண்மொழிவர்மன் இராஜ இராஜ சோழரின் 1041 ஆவது பிறந்ததின சதயவிழா சேலம் வள்ளுவர் சிலையருகில் உயிர்மெய்த் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் சார்பில் மாநிலத் தலைவர்'' சேலத்து பாரதி"சொல்லரசர் தலைமையில் நடைபெற்றது. சோழப்பேரரசின் சக்கரவர்த்தி, பேரரசர் இராஜராஜ சோழரின் திரு உருவப்படத்திற்கு சேலம் அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர்" மாரி மைந்தன் "என்.சக்திவேல் மாலையணிவித்து ஊதுபத்தியேற்றி வைத்து சூடமேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதசார்பற்ற ஜனதாதள மாவட்டத் தலைவர் ஜி.வேலாயுதம், கோவை சுந்தரம், கவிஞர் மா.புகழேந்தி, கவிஞர் அமுதா முருகையன், விமல்ராஜ், ராஜேந்திரன், ஷியாம்சுந்தர்,கவிஞர் பன்முகக் கலைஞர் ரா.சு. யுவராசு,எம்.ஜி.ஆர்.மாதேஷ், கவிஞர் கா.ரமேஷ்,”தேசநேசன்” தினேஷ்,பி.சி.ஜெயின் உட்பட பலர் பங்கேற்று இராஜராஜ சோழரின் திரு உருவப்படத்திற்கு மலரிதழ்கள்தூவி வணங்கி மரியாதை செலுத்தி அகமகிழ்ந்தனர்.