திண்டுக்கல்லில் ஏலச்சீட்டு மோசடி - ஒருவர் கைது

திண்டுக்கல்லில் ஏலச்சீட்டு மோசடி - ஒருவர் கைது

குற்றப்பிரிவு டி.எஸ்.பி. குமரேசன் மேற்பார்வையில் எஸ்.ஐ. சுதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகர் கோகுல் நிவாஸ் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி வயது 55. இவர் பெரியகோட்டை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி. ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றப்பிரிவு டி.எஸ்.பி. குமரேசன் மேற்பார்வையில் எஸ்.ஐ. சுதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெரியகோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் 63, என்பவரும் அவரது சம்பந்தி விஜயகுமார் என்பவரும் இணைந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான ஏலச்சீட்டு நடத்தி வந்தது தெரியவந்தது. இதில் வெள்ளைச்சாமி 4 சீட்டுகளில் சேர்ந்து மாதம் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 22 மாதங்கள் தொடர்ந்து கட்டி வந்துள்ளார். மொத்தம் ரூ.16 லட்சம் செலுத்தியுள்ளார்.

3 தவணைகள் மட்டுமே பாக்கியிருந்த நிலையில் ரவிச்சந்திரன் தனக்கு சொந்தமான பெரியகோட்டை மற்றும் சத்திரப்பட்டியில் உள்ள வீடு, நிலங்களை சம்பந்தி விஜயகுமார் மற்றும் அவரது மனைவி உமாமகேஸ்வரி பெயருக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தேடி வருகின்றனர்.

அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்கள் பணத்தை மோசடி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy