திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை வசதி வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சியினர் மனு

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை வசதி வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சியினர் மனு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போர்க்கால அடிப்படையில் ஆஞ்சியோ சிகிச்சை வசதி ஏற்படுத்த வேண்டும்.

விபத்தில் இறப்பவர்களுக்கு உடற்கூறாய்வு செய்வதற்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவக்கல்லூரிக்கு சென்று ஆவணங்கள் தயார் செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை ரோட்டில் உள்ள கிரீன் பார்க் பள்ளி பகுதியில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். குட்டியாப்பட்டி பிரிவில் தொடர் விபத்துகள் ஏற்படுவதால் ஆய்வு செய்து வேகத்தடைகள் அமைத்து உயிர்பலிகளை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy