தீபாவளி ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 100 குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய வசந்தன் நிலையம்!

தீபாவளி ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 100 குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய வசந்தன் நிலையம்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதியில் அமைந்துள்ள  வசந்தன் நிலையம் சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஏராளமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது ஓவியத் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற 100 குழந்தைகளுக்கு இன்று சிறப்பு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் KPY சரத் தலைமை தாங்கி, போட்டியில் வெற்றி பெற்ற 100 குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்களை வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் வசந்தன் நிலையத்தின் உரிமையாளர் ஆத்தூர் ஆர்.வி. ஸ்ரீராம் உடனிருந்தார். குழந்தைகளின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy