நீலகிரி மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட 30 குடும்பத்தினருக்கு ரூபாய் 1,80,000 மதிப்புள்ள தார்பாலின்கள் சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட 30 குடும்பத்தினருக்கு ரூபாய் 1,80,000 மதிப்புள்ள தார்பாலின்கள் சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.

கூடலூர், முதுமலை ஊராட்சிக்குட்பட்ட முதுகுளி பழங்குடியினர் கிராமத்தில் நீலகிரி மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட 30 குடும்பத்தினருக்கு ரூபாய் 1,80,000 மதிப்புள்ள தார்பாலின்கள் சமையல் பாத்திரங்கள் மற்றும் டவல்களை வழங்கப்பட்டது.
கூடலூர் வட்டாட்சியர் முனீஸ்  நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரங்கராஜன் முன்னிலையில்  செஞ்சிலுவைச் சங்க மாவட்ட செயலாளர்  மோரிஸ் சாந்தா குருஸ்  நிவாரண பொருட்களை வழங்கினார்.  இளையோர்  செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வகுமார், மேலாண்மை குழு உறுப்பினர்கள் என்.ரவி,  பிரின்ஸ், ரீட்டா காவல்துறை மசினகுடி நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy